கணணி பயன்படுத்தும் ஆண்களே ஆண்மை குறைவிற்கு வழிவகை செய்யாதீர்கள்

கணணி பயன்படுத்தும் ஆண்களே ஆண்மை குறைவிற்கு வழிவகை செய்யாதீர்கள்

தற்போதைய தொழில்நுட்ப உலகில் எங்கு சென்றாலும் லேப்டாப்பை எடுத்து செல்கின்றனர். அந்தளவிற்கு லேப்டாப்பின் பாவனை அதிகரித்துவிட்டது.தொழில் நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்று எங்குமே இந்த லேப்டாப் பாவனை இன்றியமையாத ஒன்றாகி விட்டது என்றால் மிகையாகாது. இந்நிலையில் குறிப்பாக ஆண்கள் இந்த மடிக்கணினியைப் பயன்படுத்துவதால் ஆண்மை குறைபாடு ஏற்படுவதாக ஆராய்ச்சி ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது.

எப்போதுமே ஒரு அறிவியல் சாதனத்தின் மூலம் நன்மையையும் உண்டு தீமைகளும் உண்டு. லேப்டாப் உபயோகப்படுத்தும் அனைவருக்குமே அதன் கதிரியக்கங்கள் மூலம் சில உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளும் உண்டு. அதில் மிக முக்கியமானதாக இருக்கிறது இந்த ஆண்மைக் குறைவு.கணணி பயன்படுத்தும் ஆண்களே ஆண்மை குறைவிற்கு வழிவகை செய்யாதீர்கள்!

ஏற்கனவே புகைபிடித்தல், தூக்கமின்மை, வெப்பமான இடங்களில் வேலை செய்தல், தொடர்ந்து இறுக்கமான ஜீன்ஸ் அணிதல், மொபைல் போன்களை பாக்கெட்டில் வைத்தல் போன்ற பல காரணங்களுக்காக ஆண்மைக் குறைவு ஏற்படுவதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது லேப்டாப்பைத் தொடர்ந்து மடியில் வைத்து பயன்படுத்துவதனால் விந்தணு உற்பத்தி குறைபாடுகள் ஏற்படக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகிக்கையில் வெப்ப நிலை இயல்பை விட அதிகரிக்கும்போது விந்தணுக்கள் உற்பத்தியாவதில் பிரச்னை ஏற்படும்.

நீண்ட நேரம் மடிக்கணினியை பயன்படுத்தும்போது அதில் வெப்ப நிலை அதிகரிப்பதன் காரணமாக இது நடக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனைத் தவிர்க்க மடிக்கணினியைப் பயன்படுத்தும் போது உங்களிடமிருந்து மடிக்கணினி சில அடி தூரம் விலகி இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

அத்யாவசியமான நேரங்களில் தலையணை ஒன்றை மடியில் வைத்து அதில் மடிக்கணினி வைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக வயிறு மற்றும் இடைப் பகுதிக்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Rates : 0

Loading…