கத்தரிக்காய் வத்தல் எப்படிச் செய்வது

கத்தரிக்காய் வத்தல் எப்படிச் செய்வது


தேவையான பொருட்கள்

கத்தரிக்காய்
மஞ்சள்தூள்
மிளகாய்த்தூள்
உப்பு


எப்படி செய்வது?

கத்தரிக்காயை நீளமாகவும் அல்லது வட்டமாகவும் அல்லது நீங்கள் விரும்பிய விதத்தில் வெட்டி கொஞ்சம் மிளகாய் தூள், மஞ்சள், உப்பு சேர்த்து நன்கு காயவைக்க வேண்டும். காய வைத்த கத்தரிக்காய் வத்தலை உடைத்தால் உடையும் அளவுக்கு வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்த பிறகு ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம். பழைய சாதம் சாப்பிடும் போது கத்தரிக்காய் வத்தலை வறுத்து தொட்டுக்கொள்ளலாம். குழம்பில் போடவும் பயன்படுத்தலாம். குழம்பில் போடுவதற்கு முன் 10 அல்லது 15 நிமிஷம் தண்ணிரில் ஊரவைக்க வேண்டும். குழம்பு கொதிக்கும் போது, ஊறவைத்த தண்ணியுடன் வத்தலையும் போட்டுவிடலாம். புளி தண்ணியுடன் வத்தலும் கொதிக்கணும் அப்பதான் ருசி தெரியும்.

Rates : 0

Loading…