குதிரைவாலி வெங்காய அடை எப்படிச் செய்வது

குதிரைவாலி வெங்காய அடை எப்படிச் செய்வது


தேவையான பொருட்கள்

குதிரைவாலி அரிசி – 1 கப்,
துவரம்பருப்பு – 1/2 கப்,
உப்பு, எண்ணெய்- தேவைக்கு,
காய்ந்தமிளகாய் – 5,
நறுக்கிய இஞ்சி – 1/2 டேபிள்ஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1/2 கப்,
பூண்டு – 5 பல்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1.


எப்படிச் செய்வது?

குதிரைவாலி அரிசி, பருப்பு வகைகளை தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைக்கவும். மிக்சியில் முதலில் குதிரைவாலி அரிசி, தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பாதி அரைந்ததும் பருப்பு வகைகள், இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை சேர்த்து லேசாக வதக்கி, அடை மாவில் கொட்டி கலக்கவும். மாவை புளிக்க விட வேண்டாம். தோசைக்கல்லை சூடாக்கி மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெயை விட்டு இருபுறமும் வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

Rates : 0

Loading…