சிம்பிள் தக்காளி சாதம் செய்வது எப்படி

சிம்பிள் தக்காளி சாதம் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

உதிரியாக வடித்த சாதம் – 1 கப்
நறுக்கிய தக்காளி – 4
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைாயன அளவு


செய்முறை :

கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு , கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் வெங்காயம் , பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

நன்கு வதங்கியவுடன் அதில் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
தக்காளியானது ஓரளவு வதங்கியதும், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மசித்து வேக வைக்க வேண்டும்.

தக்காளி நன்கு வதங்கி தொக்கு பதம் வந்தவுடன் இறக்கி, அதில் சாதத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டவும்.
சுவையான தக்காளி சாதம் ரெடி!

Rates : 0

Loading…