தக்காளி பச்சடி எப்படிச் செய்வது

தக்காளி பச்சடி எப்படிச் செய்வது


தேவையான பொருட்கள்

பழுத்த பெங்களூர் தக்காளி – 2,
பெரிய வெங்காயம் – பாதி,
புளிக்காத கெட்டித்தயிர் – 200 மி.லி.,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லித்தழை – சிறிது,
பச்சைமிளகாய் – 2.


எப்படிச் செய்வது?

தயிரை கட்டியில்லாமல் நன்கு அடித்துக் கொள்ளவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு கலந்து, கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: பச்சைமிளகாய்க்கு பதில் மிளகுத்தூள் அல்லது மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.

Rates : 0

Loading…