தவா பன்னீர் மசாலா செய்வது எப்படி

தவா பன்னீர் மசாலா செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்
வெண்ணெய் – 2 ஸ்பூன்
சீரகம் – 1 டஸ்பூன்
நறுக்கியவெங்காயம் – 1
நறுக்கிய இஞ்சி – 1 ஸ்பூன்
நறுக்கிய பூண்டு – 1 ஸ்பூன்
நறுக்கியபச்சை மிளகாய் – 2
நறுக்கியகுடைமிளகாய் – 1 கப்
அரைத்த தக்காளி – 2
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி – 1 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு


செய்முறை:

கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், அதில் சீரகம் போட்டு தாளித்து பின் அதில் வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, நன்கு வதக்கவும்.

பின்பு அதில் மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி, குடைமிளகாய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, அதில் கஸ்தூரி மேத்தி கொத்தமல்லி இலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.

சுவையான கடாய் பன்னீர் மசாலா ரெடி.

Rates : 0

Loading…