தென்னிந்திய ஃபிஷ் கறி எப்படிச் செய்வது

தென்னிந்திய ஃபிஷ் கறி எப்படிச் செய்வது


தேவையான பொருட்கள்

மீன் – 500 கிராம்,
கத்தரிக்காய் – 100 கிராம்,
முருங்கைக்காய் – 1,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
புளிக்கரைசல் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 1/2 கப்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
மிளகு – 1/2 டீஸ்பூன்,
தனியாத்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2,
தக்காளி – 2,
கொத்தமல்லித்தழை – சிறிது.


தாளிக்க…

நறுக்கிய சின்ன வெங்காயம் – 10,
பூண்டு பல் – 5,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
சோம்பு – 1/4 டீஸ்பூன்,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
நறுக்கிய தக்காளி – 1.


எப்படிச் செய்வது?

மீனை நன்றாக கழுவி மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து பிரட்டி வைக்கவும் கடாயில் சிறிது நல் லெண்ணெயை சேர்த்து வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். இத்துடன் தேங்காய்த்துருவல் மற்றும் மசாலாக்களை சேர்த்து நன்கு வதக்கி, ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, சின்ன வெங்காயத்தை வதக்கி, தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்பு கத்தரிக்காய், முருங்கைக்காயை சேர்த்து வதக்கவும். காய் வெந்ததும் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி, எண்ணெய் பிரிந்து வரும்போது புளிக்கரைசல் மற்றும் சுடு தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் மீன் துண்டுகளை சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதித்ததும், கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

Rates : 0

Loading…