பக்கோடா வத்தல் எப்படிச் செய்வது

பக்கோடா வத்தல் எப்படிச் செய்வது


தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி-2 கப்
அரிசி மாவு-2கப்
உப்பு- தேவைக்கு
சின்ன வெங்காயம் -100 கிராம்
பச்சை மிளகாய் – 10
சோம்பு- 1 1/2 டேபிள் ஸ்பூன்
புதினா கொத்தமல்லி- 1 கைப்பிடியளவு
இஞ்சி- 1 பெரிய துண்டு


எப்படி செய்வது?

ஜவ்வரிசியை முதல் நாள் இரவே நீரில் ஊறவைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, புதினா கொத்தமல்லி இவைகளை பொடியாக நறுக்கவும். ஒரு கப் தண்ணீர் அளவு பாத்திரத்தில் 16 கப் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும். அரிசிமாவு+ ஜவ்வரிசியை நன்கு கையால் பிசைந்து தண்ணீர் விட்டு கொஞ்சம் கரைத்துக்கொள்ளவும். தண்ணீர் கொதித்ததும் பொடியாக அரிந்த பொருட்கள் உப்பு, ஜவ்வரிசி, அரிசிமாவு, சேர்த்து நன்கு வெந்ததும் இறக்கவும்.

வெயிலில் ஒரு காட்டன் துணியில் மாவை கொஞ்சம் கொஞ்சமா கிள்ளி வைக்கவும். மாலையில் நன்கு காய்ந்திருக்கும் அதை துணியின் மறுபக்கத்தில் தண்ணீர் தெளித்து வத்தலை எடுத்து காற்றோட்டமாக வைக்கவும். மறுநாள் நன்கு வெயிலில் காயவைத்து எடுக்கவும். தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். பொரிக்கும் போது பகோடா பொரித்தது போல் வாசனையாக இருக்கும்.

Rates : 0

Loading…