பருப்பு அவல் பாயசம் எப்படிச் செய்வது

பருப்பு அவல் பாயசம் எப்படிச் செய்வது


தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு – தலா கால் கப்
கெட்டி அவல் – அரை கப்
பச்சரிசி – 50 கிராம்
பால் – 3 கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
ஏலக்காய் – 2 (தட்டவும்)
முந்திரி, காய்ந்த திராட்சை – சிறிதளவு
வெல்லத் துருவல் – ஒரு கப்


எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை தனித்தனியாக லேசாக வறுத்து எடுக்கவும். பிறகு, அதே வாணலியில் நெய்விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். அவலை நன்றாகக் கழுவித் தண்ணீர் தெளித்து வைக்கவும்.

அரிசியுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். குக்கரில் பால் ஊற்றிக் காய்ச்சி, ஒரு கொதிவந்ததும் அடுப்பைக் குறைந்த தணலில் வைத்து பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, சிறிதளவு தண்ணீர்விட்டு மூடி இரண்டு விசில் விட்டு நிறுத்தவும்.

ஆவிவிட்டதும் குக்கரைத் திறந்து, அவல், வெல்லம், அரைத்த அரிசி கலவை சேர்த்துச் சூடாக்கி ஒரு கொதிவிட்டு, தட்டிய ஏலக்காய் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே முந்திரி, திராட்சை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

Rates : 0

Loading…