புண்களை ஆற்றும் அலரி

புண்களை ஆற்றும் அலரி

ஆறாத புண்களை ஆற்றக் கூடியதும், அக்கியை போக்கும் வல்லமை கொண்டதும், ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டதுமான அலரியின் மருத்துவ குணங்களை நாம் இன்று பார்ப்போம்:

சாலையோரங்களில் கிடைக்க கூடிய பூ அலரி. இது 3 வண்ணங்களை கொண்டது. அலரிப் பூவை நாம் கோயில் வளாகங்களில் காணலாம். அலரியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. பூஞ்சை காளான்கள் மற்றும் நுண் கிருமிகளை அழிக்க கூடிய தன்மை கொண்டது.

வீக்கம், வலியை குறைக்கும். அலரியில் இரண்டு வகை உண்டு. அவை ஒற்றை அலரி, அடுக்கு அலரி. ஒரு பூ மட்டும் உள்ளது ஒற்றை அலரி. ஒரு பூவில் பல அடுக்குகள் இருந்தால் அது அடுக்கு அலரி. மஞ்சள், வெள்ளை, சிவப்பு, குங்கும வண்ணங்களில் இந்த அலரி இருக்கும். இவை அனைத்தும் ஒரே மருத்துவ குணம் கொண்டவை. அலரியை கொண்டு தேனீர் தயாரிக்கலாம். ஒரு வேளை தேனீர் தயாரிக்க அடுக்கு அலரி என்றால் 2 பூக்கள், ஒற்றை அலரி என்றால் 5 பூக்கள் எடுத்துக் கொள்ளவும்.

பூக்களுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். அதனுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். இது காய்ச்சலை போக்க கூடியது. ரத்தம் சுத்தமாகும். மென்மையான தூக்கம் வரும். அலரி இலையை பசையாக்கி எண்ணெயில் இட்டு மேலே தடவுவதால், தொழுநோயால் ஏற்படும் ஆறாத புண்கள் ஆறும். பால்வினை நோயால் ஏற்படும் புண் குணமாகும். அலரியில் விஷத்தன்மை உள்ளதால் அளவுடன்தான் பயன்படுத்த வேண்டும்.

கவிழ் தும்பை: இனி கவிழ் தும்பையின் சிறப்பை பற்றி காணலாம். புல்வெளியில் பார்க்க கூடிய தாவரம் கவிழ் தும்பை. இதற்கு கழுதை தும்பை என்ற பெயரும் உண்டு. தும்பை இனத்தை சேர்ந்தது. பூக்கள் நட்சத்திரத்தை போன்று வெண்மை நிறத்தில் இருக்கும். கவிழ் தும்பை இலைகளை பயன்படுத்தி தேனீர் தயாரிக்கலாம். 2 ஸ்பூன் தேனுடன், கவிழ் தும்பையை ஒரு பிடி அளவுக்கு போட்டு வதக்க வேண்டும். பின்னர், ஒரு டம்ளர் அளவுக்கு நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இதை வடிகட்டி குடிப்பதால், பேதி, ரத்த கழிச்சல், வயிற்றுப்போக்கு, மாதவிலக்கு பிரச்னை சரியாகும். கவிழ் தும்பை இலையை அரைத்து பாம்பு கடித்த இடத்தில் கட்டுவதால், பாம்பு கடி சரியாகும். கவிழ் தும்பையை பயன்படுத்தி, வாதத்தினால் ஏற்படும் கைகால் வலி, வீக்கம் மற்றும் தொடை இடுக்கில் வரும் அரையாப்பு கட்டியை போக்க கூடிய மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

கவிழ் தும்பை இலை பொடியை, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் நன்றாக வதக்கி எடுத்து கொண்டு மேல் பூச்சாக பயன்படுத்தலாம். தொடை இடுக்கில் நெறிக் கட்டிய இடத்தில் போடும்போது வலி சரியாகும். இது நுண்கிருமிகளை அழித்து, தோல்நோய்களை போக்கும் தன்மை கொண்டது. மூட்டு வலி, கழுத்தில் இருக்கும் கட்டிகள், வீக்கத்தை சரி செய்ய கூடியது.

Rates : 0

Loading…