பைத்தியத்திற்கு மருந்தாகும் எலுமிச்சை

பைத்தியத்திற்கு மருந்தாகும் எலுமிச்சை

காய்கறிகள் போலவே பல்வேறு பழங்களும் மனிதர்களுக்கு ஏற்படும் உடல் நலக்கோளாறுகளை தணிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இதில் முன்னோர்கள் கண்ட எண்ணற்ற பழங்களில் ஒன்று தான் எலுமிச்சை. எலுமிச்சை என்றதும் வெள்ளிக்கிழமை தோறும் வீட்டு வாசலில் பழத்தைவெட்டி குங் குமத்தை தடவி வைப்பதும் வாசலின் முகப்பில் முழுபழத்தை கட்டி தொங்கவிடுவதும் நினைவுக்கு வரும். இதன் ஊறுகாயின் சுவைக்கு மயங்காதவர்களே கிடையாது என்று கூறலாம். எலுமிச்சை முள்ளுள்ள சிறு மரவகுப்பை சேர்ந்தது.

தமிழகம் முழுவதும் வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இலை, பழம் மருத்துவகுணம் கொண்டவை. மேற்பரப்பில் பசுமையுடன் சிறு புள்ளிகளையும் கொண்டதாக பழம் இருக்கும். உடல் சூடு தணிக்கவும் பசித்தூண்டியாகவும் பயன்படும் இலையை மோரில் ஊறவைத்து மோரை உணவில் பயன்படுத்தினால் பித்தம் சூடு, வெப்பச்சூடு தணியும். சற்றுமுன்னுக்குபின் முரணாக பேசினால் எலுமிச்சை பழத்தை தேய்த்து குளி என்பார்கள்.

மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு பழத்தை தலைக்கு தேய்த்து அரைமணிநேரம் சென்ற பிறகு குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கவேண்டும். தொடர்ந்து 12நாட்கள் பழச்சாற்றில் ஊறவைத்த சீரக சூரணத்தை கொடுத்து வரவேண்டும். பின்பு மீண்டும் 12நாட்கள் குளிக்க வைத்து சூரணம் தரவேண்டும். இதுபோல் 4முறை (48) நாட்கள் கொடுத்து வந்தால் பைத்தியம் முழுவதும் குணமடையும். எலுமிச்சை சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு பால் வகைக்கு அரைலிட்டர் எடுத்து காய்ச்சி வடித்து தலைமுடிக்கு ஆறு மாதம் தொடர்ந்து தடவி வர முடி நரைக்காமல் நீண்டு வளரும்.

நகச்சுற்று என்ற நோய் ஏற்பட்டால் தாங்க முடியாத குத்தல் வலி உண்டாகும். எத்தகைய மருத்துவம் செய்தாலும் வலியும் வேதனையும் நீங்காது. இவர்கள் நகச்சுற்று ஏற்பட்ட விரலில் எலுமிச்சை சொருகி வைத்தால் வேதனை குறையும். மேலும் நகச்சுற்றும் பழுத்து உடையும். கபநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் இருமல் ஏற்படும் இவர்கள் எலுமிச்சை சாற்றை 30மிலி இந்துப்பு 15 கிராம், சீரகம் 5 கிராம் சேர்த்து தண்ணீரில் கலந்து 18 நாட்கள் குடித்து வந்தால் கபநோயின் தீவிரம் குறைந்து குணம் ஏற்பட தொடங்கும். பித்தத்தால் வாய்பிதற்றல் ஏ்பட்டவர்களுக்கும் பக்கசூலை வாதம் ஏற்பட்டவர்களுக்கும் இதை கொடுத்தால் குணமடையும். கைகால்களில் கருமையான படை படர்ந்துள்ளவர்கள் இதை செய்தாலும் குணமடையும்.

கைகால்களில் கருமையான படை படர்ந்துள்ளவர்கள் எதை செய்தாலும் அது நீங்காது. இவர்கள் எலுமிச்சை சாற்றில் நிலாவரை வேரை தொடர்ந்து ஒரு வாரம் இழைத்து பூசிவர உடனடியாக அந்த கருமை நீங்கி தோல் பழைய நிலைக்கு வரும் எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து காலை வேளையில் மட்டும் 120 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் ஆயுள் பெருகும். பேதி மருந்து சாப்பிட்டு அதுவே அளவுக்கு அதிகமாக பேதியானால் அவர்கள் எலுமிச்சை பழச்சாற்றை 100மிலி அளவில் எடுத்து 100மிலி தண்ணீர் கலந்து குடித்தால் கழிச்சல் நின்றுவிடும். உடல்சூடு அதிகம் ஏற்பட்டால் புளித்தமோரில் இதன் இலையை ஊறவைத்து அதை பழைய சோற்றில் ஊற்றி கல்உப்புபோட்டு சாப்பிட உடலில் ஏற்படும் அதிக அளவு வெப்பம் உடனடியாக குறைந்துவிடும்.

கோண துவையுங் குறியுனைங் கொக்காசில்
கோணத் துனையுங் குருணைபோற் கோணச்
சடமதியுண் மாறமற் சம்பீரக் கற்பஞ்
சடமதியுண் மாறமற் சண்
மந்திரிக்கு மந்திரிபாய் மண்ணுக்கு மன்னணெத்
தந்திரிக்கு மிந்திரன்பேற் சாருமே. முந்தவரு
கம்பீரமாய்ச் சரக்கின் கெண்ணியமாய் வாகடர்க்குச் சம்பீர மாமெலுமிச்சை

என்கிறார் தேரையர். அளவுக்கு அதிகமானால் அமுததும் நஞ்சு என்பது உணர்ந்து தேவைக்கு மட்டுமே அளவோடு பயன்படுத்தி நோய் நீங்கி நலமுடன் வாழ்வோம்.

Rates : 0

Loading…