மரவள்ளிக்கிழங்கு அடை எப்படிச் செய்வது

மரவள்ளிக்கிழங்கு அடை எப்படிச் செய்வது


தேவையான பொருட்கள்

தோல் நீக்கி, அரை வேக்காடு வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு – 1 கப்,
கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 1 கைப்பிடி,
காய்ந்த மிளகாய் – காரத்துக்கேற்ப,
பூண்டு – 5 பல், சீரகம் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் – சிறிது,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது.


எப்படிச் செய்வது?

பருப்பு வகைகளை ஊற வைக்கவும். ஊறியதும் அவற்றுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு சேர்த்து அரைக்கவும். பிறகு அதில் வேக வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து அடைகளாக வார்க்கவும். வெங்காயம், கேரட் துருவல் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் பரிமாறவும்.

Rates : 0

Loading…