முடக்கத்தான் இட்லி எப்படிச் செய்வது

முடக்கத்தான் இட்லி எப்படிச் செய்வது


தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி – 400 கிராம்,
தோலுள்ள உளுந்து – 100 கிராம்,
ஆய்ந்த முடக்கத்தான் இலை – 8 கைப்பிடி,
உப்பு – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

புழுங்கலரிசி, தோல் உளுந்து இரண்டையும் தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நன்றாக கழுவி அரிசி, உளுந்து, முடக்கத்தான் இலை அனைத்தையும் சேர்த்து கிரைண்டரில் போட்டு அரைத்து உப்பு போட்டு கரைக்கவும். புளித்ததும் இட்லிகளாக வார்த்தெடுத்து சாம்பார், சட்னி, பொடியுடன் சூடாக பரிமாறவும்.

Rates : 0

Loading…