ரத்தப்பேதி போக்கும் காரை

ரத்தப்பேதி போக்கும் காரை

கிராமங்களில் பள்ளிக்கு நடந்து செல்லும் சிறுவர்கள் வழியில் பறித்து உண்ணும் பழங்களில் இலந்தைக்கு அடுத்து காரைதான். முள் உள்ள செடி என்பதாலும் சிறிது துவர்ப்பு சுவை உடையதாக இருப்பதாலும் அதிலுள்ள இனிப்பு சுவை சிறுவர்களை சுண்டி இழுக்கும். அதிகம் தின்றால் தொண்டையை பிடிக்கும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளரும்.
காரையில் குத்துகாரை, பெருங்காரை என்று இரு வகையுண்டு. முள்ளோடு இலையும் மாற்றடுக்கில் அமைந்து புதராக கிடக்கும். காய் பச்சை நிறமாக இருந்து பழம் மஞ்சள் நிறமாக மாறி பின்பு கருப்பாகும். நரம்பு சதைகளை சுருங்க செய்யும் தன்மை கொண்டது.

“ஆறுதலை இல்லைஅடி யெனுக் கண்பாகத்
தேறுதலை சொல்வர் சிலரில்லை வேறெனக்குத்
திக்காரு மில்லை சிவனே! பழிக்கஞ்சி
சொக்கே! நின்றானே துணை.”

காரையை புளியோடு சமைத்துண்ணரத் ரத்த தகடுப்பு விலகும். பழத்தை உடைத்து விதையை நீக்கி காய வைத்து அதை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு இரவில் ஊறவைத்து நாள் தோறும் காலை மாலை குடித்து வந்தால் கழிச்சல், சீதக்கடுப்பு குணமாகும். இலையை வேகவைத்து கடைந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு ரத்த பேதி, அதிசார பேதி குணமாகும்.

ரத்த பேதி போக்கும்.

இளமைப் பருவத்தில் பெண்கள் ஆண்கள் என அனைவருக்கும் முகத்தில் ஏற்படும் பருக்கள் அழகை கெடுக்கும். நகம் பட்டால் வடுக்கள் ஏற்படும். இவர்கள் பழத்தின் சதைகளை நிழலில் காயவைத்து அதன் மீது தடவி வந்தால் பருக்கள் உடைந்து வடு இல்லாமல் குணமாகும்.. காரைப் பழங்களை காலை மாலை சாப்பிட்டு வர சூடு தணியும். தொடர்ந்து சாப்பிட இரைப்பை, நுரையீரல் உள் உறுப்புகள் பலப்படும்.

காய்ந்த பழங்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து காலை மாலை குடித்தால் இரண்டு நாளில் வயிற்று போக்கு நிற்கும். வேரின் பட்டையை சேகரித்து தண்ணீர் விட்டு மைய அரைத்து கட்டியின் மீது பற்று போட்டால் கட்டிகள் உடைந்து ஆறும்.
வேரை சூரணம் செய்து அதில் 5 கிராம் எடுத்து ஓமத்தை குடிநீர் செய்து அந்த குடிநீரில் சூரணத்தை போட்டு ஊறவைத்து மறுநாள் வடிகட்டி குடித்து வந்தால் முப்பிணியான வாத, பித்த, கபத்தை சமப்படுத்தும்.

பழத்தின் சதைகளை சேகரித்து நிழலில் காயவைத்து பொடியாக்கி வைத்து கொள்ள வேண்டும். இதில் 20 கிராம் அளவில் தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தால் பாரிச வாதம், பக்கசூலை, இருமல் நீங்கும். அடிக்கடி மூர்ச்சையாகி கீழே விழுபவர்கள் இதை உண்டு வந்தால் குணம் ஏற்படும். குருதிப் போக்கையும் கழிச்சலையும் நீக்கும். இதன் மருத்துவ குணங்களை அறிந்து நமது முன்னோர்கள் இதை பயன்படுத்தி பல்வேறு நோய்களை விலக்கி நலமுடன் வாழ்ந்துள்ளார்கள். இதைத்தான்

“காரைத்தழைக்குக் கடும்பிரந்தம் போம்புளியைச்
சோரப் பெய்தாக்கி சுவைத் தறி நீ.
சீதக்கடுப்பஞ் செறிந்த விரத்தக் கடுப்பும்
ஓது மதி சாரமும் போமுண்மையே-மோது கடல்
நீரைப்பருகு முகினேரளாகை மின்கொடியே
காரைப் பழத்திற்குக் காண்.”-

என்கின்றார் அகத்தியர். காட்டிலே தானாகவே முளைத்து கிடக்கும் காரைக்காய் தானே என்று ஒதுக்கிடாமல் நமது முன்னோர்கள் கண்டறிந்து சொல்லிய வழியில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

Rates : 0

Loading…