ரிப்பன் பக்கோடா எப்படிச் செய்வது

ரிப்பன் பக்கோடா எப்படிச் செய்வது


தேவையான பொருட்கள்

பதப்படுத்தப்பட்ட அரிசி
மாவு – 4 கப், பொட்டுக்கடலை
மாவு – 1 கப், தண்ணீர் – 3 கப்,
சூடான எண்ணெய் – 1 பெரிய கரண்டி, வெள்ளை எள் – 2 டீஸ்பூன், தூள் உப்பு – 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை அளந்து ஊற்றி உப்பு சேர்த்து சூடாக்கவும். கொதி வந்ததும் தீயை குறைத்து அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து, பின் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். பிறகு எள், மிளகாய்த்தூள், பொட்டுக்கடலை மாவு, 1 கரண்டி சூடான எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பொரிப்பதற்கு முன் சிறிது தண்ணீர் தெளித்து கலந்து மாவைப் பிசைந்து முறுக்கு அச்சில் ரிப்பன் பக்கோடா அச்சைப் பயன்படுத்தி சூடான எண்ணெயில் நேரடியாக மாவைப் பிழிந்து கொள்ளவும். இருபுறமும் நன்கு வெந்து வந்ததும் எடுத்து பரிமாறவும்.

Rates : 0

Loading…