வேர்க்கடலை சுண்டல்ட எப்படிச் செய்வது

வேர்க்கடலை சுண்டல்ட எப்படிச் செய்வது


தேவையான பொருட்கள்

பச்சை வேர்க்கடலை – 1 கப்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
காய்ந்தமிளகாய் – 3,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
உடைத்த உளுந்து – 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிது,
தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை,
தனியா – 1 டீஸ்பூன்,
முந்திரியை வறுத்து பொடித்தது – 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பச்சை வேர்க்கடலையை 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, உப்பு போட்டு குக்கரில் வேகவைத்து கொள்ளவும். வெறும் கடாயில் காய்ந்தமிளகாய், தனியா, கடலைப்பருப்பு வறுத்து ஆறியதும் மிக்சியில் பொடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து வெந்த கடலையை போட்டு பிரட்டி, வறுத்த மசாலாப்பொடி, முந்திரி பொடி, சிறிது உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி, மல்லித்தழையை தூவி பரிமாறவும்.

Rates : 0

Loading…