அழகு பொருட்களில் மஞ்சளைப் பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்

Loading...

அழகு பொருட்களில் மஞ்சளைப் பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்

சருமத்தைப் பராமரிக்க காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் அழகு பராமரிப்புப் பொருள் தான் சமையலறையில் இருக்கும் மஞ்சள் தூள். அக்கால பெண்கள் தங்களின் முகத்திற்கு அன்றாடம் மஞ்சள் தேய்த்து குளித்து வந்ததால் தான், அவர்களுக்கு எவ்வித சரும பிரச்சனைகளும் வந்ததில்லை.இதற்கு காரணம் மஞ்சளில் உள்ள கிருமிநாசினி பண்புகள் தாள். அதுமட்டுமின்றி, இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் தான், இது பல சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய காலத்தில் மஞ்சள் தேய்த்துக் குளிப்போரின் எண்ணிக்கை குறைவு. மாறாக மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் தான் போடுகிறார்கள்.என்ன தான் இருந்தாலும் இக்காலத்தில் மஞ்சளை முகத்திற்குப் பயன்படுத்தும் போது ஒருசில தவறுகளை பெண்கள் செய்கின்றனர். அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தேவையில்லாத பொருட்களுடன் சேர்ப்பது

மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், சரியான பொருட்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுவும் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் தான் மஞ்சளுடன் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால், முழு பலனையும் பெறலாம்.

நீண்ட நேரம் கூடாது

மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது மஞ்சள் நிற கறைகளை சருமத்தில் ஏற்படுத்தும்.

குளிர்ந்த நீர்

மஞ்சள் கொண்டு ஃபேஸ் பேக் போட்ட பின்னர், குளிர்ந்த நீரினால் முகத்தை நன்கு கழுவி, பின் துணியால் தேய்த்து துடைக்காமல் ஒற்றி எடுக்க வேண்டும்.

கழுத்துப் பகுதியை தவிர்ப்பது

ஃபேஸ் பேக் போடும் போது பலரும் முகத்திற்கு மட்டும் தடவி, கழுத்தை மறந்துவிடுவோம். இதனால் கழுத்துப் பகுதி மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். எனவே எப்போதும் மாஸ்க் போடும் போது, கழுத்துப் பகுதியிலும் மறக்காமல் பயன்படுத்துங்கள். இதனால் முகம் மற்றும் கழுத்து ஒரே நிறத்தில் இருக்கும்.

தண்ணீர் தான் சிறந்தது

எத்தனைப் பொருட்களைக் கொண்டு மஞ்சளை முகத்திற்கு பயன்படுத்தினாலும் நீரைக் கொண்டு பயன்படுத்துவதற்கு ஈடாகாது. ஏனெனில் நீரைக் கொண்டு பயன்படுத்தும் போது தான், உண்மையிலேயே மஞ்சளின் முழு நன்மையையும் பெற முடியும்.

சோப்பைப் பயன்படுத்தக்கூடாது

முதலில் முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்திய பின், சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சோப்பானது கஷ்டப்பட்டு முகத்தில் போட்ட ஃபேஸ் பேக்கினால் கிடைக்கும் நன்மைகளைக் கெடுத்துவிடும். எனவே முதலில் அதைத் தவிர்க்க வேண்டும்.

கிராமப்புறத்தில் வாழும் பெண்களின் அழகின் ரகசியம் என்னவென்று கேட்டால், அவர்கள் மஞ்சளைத் தான் சொல்வார்கள். விலைமலிவில் கிடைக்கும் மஞ்சளில் அவ்வளவு சக்தி உள்ளதா என்று பலர் கேட்பார்கள். ஆம் உண்மையிலேயே மஞ்சளில் பலர் நினைக்காத அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது.மேலும் நம் அம்மா, பாட்டியின் அழகிற்கும் மஞ்சள் தான் காரணமாக இருக்கும். ஏனெனில் மஞ்சளில் ஆன்டி-செப்டிக், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் அதில் குர்க்யூமின் என்னும் மஞ்சன் நிறமி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்.

அதுமட்டுமல்லாமல் மஞ்சளை நீரில் கலந்து நாளுக்கு ஒரு முறை அதனை குடித்து வந்தால், இரத்தமானது சுத்தமாகும். குறிப்பாக மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளித்து, சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதுப்போன்று மஞ்சளானது சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே இப்போது மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

முகப்பரு

முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் தூளில் கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால், பருக்கள் மறையும்

கருமையைப் போக்கும்

மஞ்சள் தூளில், வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

சுருக்கங்கள்

சருமம் சுருக்கங்களுடன் காணப்பட்டால், மஞ்சள் தூளில் கரும்புச்சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் சரிசெய்யலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள். மஞ்சள் தூளில் மோர் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

குதிகால் வெடிப்பு

குதிகால் வெடிப்பு இருந்தால், அதனை போக்க, தினமும் காலையில் 3 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சில துளிகள் தேங்காய் எண்ணெய்/விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிக்க செல்ல வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மஞ்சளானது வெடிப்புக்களை போக்கும்.

கரும்புள்ளிகள்

கடலை மாவில், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, குளிக்கும் போது ஈரமான சருமத்தில் தடவி நன்கு 5 நிமிடம் மசாஜ் செய்து குளித்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளுடன், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

அழகான உதடுகள்

உதடுகள் கருமையடைந்து இருந்தால், மஞ்சள் தூளில் பால் சேர்த்து கலந்து, உதட்டில் மட்டுமின்றி முகத்திலும் தடவி மசாஜ் செய்து கழுவி வந்தால், உதடுகள் அழகாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

முடி வளர்ச்சியை தடுக்கும்

பெண்களின் மூக்குக்கு கீழே, கை, கால்களில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்க, மஞ்சள் தூளுடன், வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், முடியின் வளர்ச்சியானது தடுக்கப்படும்.

பொலிவான சருமம்

சருமம் பொலிவோடு இருக்க, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும்.

ஸ்ட்ரெட்ச் மார்க்

பிரசவத்திற்கு பின் ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படாமல் இருக்க, கர்ப்ப காலத்தில் தினமும் தயிர் மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, வயிற்றில் தடவி வந்தால், பிரசவத்திற்கு பின் ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வெள்ளையான சருமம்

சருமம் வெள்ளையாக வேண்டுமானால், மஞ்சள் தூளுடன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி நன்கு 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

Loading...
Rates : 0