உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கா என்பதை கண்டறிய சில வழிகள்

உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கா என்பதை கண்டறிய சில வழிகள்

இன்றைய காலத்தில் இதய நோயால் ஏராளமான மக்கள் உயிரை இழக்கின்றனர். இதற்கு மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான் முதன்மையான காரணங்கள். மனித உடலில் ஏதேனும் ஒரு பிரச்சனை வர ஆரம்பித்தால், அதற்கான குறிப்பிட்ட அறிகுறிகள் வெளிப்படும்.

அதிலும் இதயம் ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தால், அதுவும் சில அறிகுறிகளை நமக்கு வெளிக்காட்டும். ஆனால் நம்மில் பலர் அந்த அறிகுறிகளை சாதாரணமாக விட்டுவிடுகிறோம். இதனால் இதய நோயால் உயிரை இழக்க நேரிடுகிறது.

ஒருவரது இதயம் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் தென்படும் சில அறிகுறிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து, உங்களை இதய நோய் தீவிரமடைவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நெஞ்சு இறுக்கம்

உங்களுக்கு அடிக்கடி மார்பு பகுதியில் இறுக்கம் ஏற்படலாம். பலரும் இப்படி ஏற்படும் நெஞ்சு இறுக்கத்தை அசிடிட்டி அல்லது களைப்பின் காரணமாக ஏற்படுகிறது என்று சாதாணமாக விட்டு விடுவார்கள். ஆனால் அது உங்கள் இதயம் ஆரோக்கியமாக இல்லை என்பதை அறிகுறி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மூச்சு விடுவதில் சிரமம்

உங்களால் சரியாக மூச்சு விட முடியாவிட்டால், அதுவும் சிறு வேலை செய்தாலும், மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்ந்தால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக இல்லை, உடனே பரிசோதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

குமட்டல்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது குமட்டல் ஏற்படுவது சாதாரணம். ஆனால் எந்த ஒரு காரணமும் இல்லாமல், அடிக்கடி குமட்டல் வருமாயின், அது ஆரோக்கியமற்ற இதயத்திற்கான அறிகுறிகளுள் ஒன்று.

அதிகப்படியான வியர்வை

இதயம் ஆரோக்கியமாக இல்லாமல் இருக்கும் போது, இதயம் கடுமையான வேலைக்கு உட்படுத்தப்பட்டு, அதனால் உடலினுள் மிகுந்த வெப்ப உணர்வையும், அதிகப்படியான வியர்வை வெளியேற்றத்தாலும் அவஸ்தைப்படக்கூடும்.

தலைச்சுற்றல்

இதயம் அதிகப்படியான அழுத்தத்திற்குட்படும் போது, மூளைக்கு வேண்டிய இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்பட்டு, அடிக்கடி தலைசுற்றுவது போன்று இருக்கும்.

வயிற்று உப்புசம்

இதயம் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், அதனால் கடுமையான வயிற்று உப்புசத்தால் அடிக்கடி காரணமின்றி அவஸ்தைப்படக்கூடும். ஆகவே வயிற்று உப்புசம் அதிகம் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

சோர்வு

உடல் சோர்வு அல்லது களைப்பு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இருப்பினும் அதிகப்படியான களைப்பு ஆரோக்கியமற்ற இதயத்திற்கான அறிகுறிகளுள் ஒன்று என்பதை மறவாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

Rates : 0

Loading…