கிரான்பெர்ரி சட்னி செய்வது எப்படி

Loading...

கிரான்பெர்ரி சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

கிரான்பெர்ரி – அரை கப் (சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும்)
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்)
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 1 டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை – அரை கப்
காய்ந்த மிளகாய் – 2
சிவப்பு குடமிளகாய் – ஒன்றில் கால் பாகம்
எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயத்தைப் போட்டு மிதமான தீயில் நிறம் மாற வதக்கவும். இதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சிவப்பு குடமிளகாய் சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் நன்கு வதக்கவும். இதில் கிரான்பெர்ரியைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் கிரான்பெர்ரியின் நிறம் மாறும் வரை ஐந்து நிமிடம் நன்கு வதக்கவும். இறுதியாக மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவை நன்கு ஆறியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர், வேர்க்கடலை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதை தோசை அல்லது சூடான சாதத்தில் நெய், இந்த சட்னியை வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Rates : 0

Loading…