குங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி செய்வது எப்படி

குங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

தயிர் – 1 கப்
சர்க்கரை – 2 ஸ்பூன்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
பால் – 1 ஸ்பூன்
ஏலக்காய் தூள் -அரை ஸ்பூன்
நட்ஸ் – 1 ஸ்பூன்


செய்முறை

ஒரு டம்ளரில் சிறிது பால் எடுத்து குங்குமப்பூவை போட்டு ஊற விடவும். தயிர் எடுத்து நன்கு கடைந்து வைக்கவும்.

பின் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள், ஊற வைத்த குங்குமப்பூ பால் சேர்த்து, ஜாரில் எடுத்து நுரைக்க அடிக்கவும்.

ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே நட்ஸ் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும். சில்லென்று பரிமாறினால் சுவை அபாரமாக இருக்கும்.

Rates : 0

Loading…