கொள்ளு சட்னி செய்வது எப்படி

கொள்ளு சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

கொள்ளு – அரை கப்
சின்ன வெங்காயம் – 4
பூண்டு – 4 பல்
மிளகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2 அல்லது காரத்துக்கு ஏற்ப‌
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒன்றரை டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு


தாளிக்க‌:

கடுகு – கால் டீஸ்பூன்
எண்ணெய்/நெய் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு


செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் கொள்ளு சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும். அல்லது சூடான தண்ணீரில் கொள்ளு ஐந்து மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். புளியைத் தனியாக தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும்.

கொள்ளுப் பயறைக் கழுவி குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து புளிக்கரைசல், உப்பு தவிர தேவையானவற்றில் உள்ள அத்தனை பொருட்களையும் சேர்த்து மூன்று நான்கு விசில் விட்டு வேக வைக்கவும். சூடு ஆறியதும், புளிக்கரைசல், உப்பு சேர்த்து மசிக்கவும்.

இதை ஒரு கப்பில் எடுத்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துத் தாளித்து கப்பில் ஊற்றிக் கிளறவும். இதனை சாதம் அல்லது தோசைக்குச் சேர்த்துச் சாப்பிடலாம்.

Rates : 0

Loading…