சிக்கனை கழுவி சமைத்தால் ஆபத்து எச்சரிக்கை சிக்கன் பிரியர்களே

சிக்கனை கழுவி சமைத்தால் ஆபத்து எச்சரிக்கை சிக்கன் பிரியர்களே

எந்த உணவுகளை சமைத்தாலும் சரி, அதில் எந்த விதமான கிருமிகளும் சமைத்த பின்னர் இருக்க கூடாது என்பது தான் எல்லோருடைய எண்ணமாக இருக்கும்.

அதிக மக்கள் விரும்பி உண்ணும் உணவான சிக்கனை பலர் கடைகளில் பச்சையாக வாங்கி வீட்டிற்கு வந்தவுடன் தண்ணீரில் கழுவி விட்டு தான் சமைக்க தொடங்குவார்கள்.

இப்படி தண்ணீரில் கழுவுவது உடல் நலத்துக்கு கேடு என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாக பச்சையான சிக்கனை கழுவினால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் ஒழியும் என பெரும்பாலோர் நம்புகின்றனர். இது முற்றிலும் தவறு!

பச்சையான சிக்கனில் சல்மோனிலா மற்றும் காம்ப்லோபாக்டர் எனும் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் உள்ளது. இதை தண்ணீரில் கழுவும் போது இதிலிருந்து வரும் கிருமிகளை அது பரவ செய்கிறது என்பது தான் நிதர்சன உண்மையாகும்.

சரி பச்சையான சிக்கனை சுத்தபடுத்தியே ஆக வேண்டும் என்பவர்களுக்கு ஒரு வழி உள்ளது. அதாவது, சுத்தமான வெள்ளை டிஷ்யூ பேப்பரை கொண்டு சிக்கனை நன்றாக துடைத்து பின்னர் சமைக்கலாம்.

சிக்கன் மட்டுமின்றி எந்த பொருளை சமைத்தாலும் சமைக்கும் பாத்திரங்களும், சமைப்பவரின் கைகளும் நன்றாக கழுவி கொள்ள வேண்டும் என்பது முக்கிய விடயமாகும்.

Rates : 0

Loading…