சிவப்புக் குடமிளகாய் சட்னி செய்வது எப்படி

சிவப்புக் குடமிளகாய் சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

பெரிய சிவப்புக் குடமிளகாய் – 1
பொடியாக நறுக்கிய தக்காளி – ஒன்றில் பாதி
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


தாளிக்க:

எண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு


செய்முறை:

புளியை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வையுங்கள். குடமிளகாயின் விதைகளை நீக்கிவிட்டு சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஊறிய புளி (தண்ணீர் இறுத்தது), தக்காளி, குடமிளகாய் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்த பொருட்களைச் சேர்த்துத் தாளித்து, அரைத்து வைத்திருக்கும் தக்காளிக் கலவையைச் சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து சட்னி சுருங்கும் வரை வதக்கவும். இதை தோசை அல்லது சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

Rates : 0

Loading…