செளசெள சட்னி செய்வது எப்படி

செளசெள சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

செளசெள – 3/4 கப் (தோல் நீக்கி டைஸ் வடிவத்துக்கு நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை – 250 கிராம்
உளுந்து – 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
புளி – பெரிய எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் – 2-3
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்


செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து பொன் நிறத்துக்கு வந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய செளசெள சேர்த்து வேகும் வரை மிதமான தீயில் வதக்கவும். கூடவே புளியைச் சேர்த்து வதக்கவும்.

காய் வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். இத்துடன் கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். இதை அப்படியே சாப்பிடலாம். விருப்பமானவர்கள் கடுகு, கறிவேப்பிலை, உளுந்து, தாளித்துக் கொட்டியும் சாப்பிடலாம்

Rates : 0

Loading…