நம் அன்றாட சில செயல்களால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது தெரியுமா

நம் அன்றாட சில செயல்களால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது தெரியுமா

நம் உடலில் சிறுநீரகங்கள் முக்கிய பணியை செய்கிறது. அதுவும் இரத்தத்தில் இருந்து கழிவுப் பொருட்களை வடிகட்டி, இரத்தத்தை சுத்தம் செய்யும் என்பது தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிறுநீரகங்கள் இரத்த அழுத்தம், எலக்ட்ரோலைட்டுகள் போன்றவற்றை சீராக வைத்துக் கொள்வதிலும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியிலும் ஈடுபடுகிறது. ஒரு நாளைக்கு சிறுநீரகங்கள் சுமார் 120-150 குவாட்ஸ் இரத்தத்தை வடிகட்டுவதோடு, 1-2 குவாட்ஸ் கழிவுகள் மற்றும் அதிகப்படியான நீர்மத்தை சிறுநீர்ப்பைக்கு அனுப்வி, சிறுநீரின் வழியே கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது.

இத்தகைய முக்கிய பணியில் ஈடுபடும் சிறுநீரகங்கள், நமது அன்றாட சில செயல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 20 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்க. அதில் 1000 பேருக்கு மேலானோர் தீவிரமான சிறுநீரக பிரச்சனைகளால் கஷ்டப்படுகிறார்கள். சிறுநீரகங்கள் ஒரே இரவில் பாதிப்படைவதில்லை. பல வருடங்களாக நாம் மேற்கொண்டு வரும் செயல்களான, மோசமான வாழ்க்கை முறை மற்றும் உடல்நல பிரச்சனைகளை சரியாக பராமரிக்காமல் இருப்பது போன்றவற்றால் சிறுநீரகங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றன.

ஒரு ஆய்வில் கெட்ட பழக்கங்கள் சிறுநீரகங்களை வேகமாக பாதிக்கின்றன என்பது தெரிய வந்தது. ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கங்களைக் கொண்ட 3-4 பேரையும், கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்களையும் பரிசோதித்தனர். அதில் கெட்ட பழக்கங்கள் உள்ளவர்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோயின் அபாயம் 337 சதவீதம் அதிகம் இருப்பது தெரிய வந்தது.

இக்கட்டுரையில் சிறுநீரகங்களை பாதித்து அழுகி போகச் செய்யும் சில மோசமான செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அத்துடன் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் பானங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

மது பானங்கள்

சிறுநீரகங்கள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை வடிகட்ட உதவும். அதுவும் மது பானங்களை ஒருவர் அதிகம் குடித்தால், அதனால் சிறுநீரகங்கள் அதிகப்படியான அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும். இப்படியே நீண்ட நாட்கள் சிறுநீரகங்கள் கடினமாக வேலை செய்தால், விரைவில் சிறுநீரகங்கள் பழுதடைந்து செயலிழக்க ஆரம்பிக்கும்.

மேலும் மது பானம் உடலை வறட்சி அடையச் செய்து, சிறுநீரகங்களின் செயல்பாட்டில் பெரும் இடையூறை உண்டாக்கும். அதோடு மது பானம் கல்லீரல் நோய்களை உண்டாக்கி, சிறுநீரகங்களுக்கு செல்லும் சீரான இரத்த ஓட்டத்தில் இடையூறை உண்டாக்கும். ஆகவே மது பானம் பருகும் பழக்கத்தை குறைப்பதோடு, முடிந்த அளவு தவிர்த்திடுங்கள்.

போதுமான நீர் அருந்தாமல் இருப்பது

சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு போதுமான அளவு நீரைப் பருக வேண்டியது அவசியம். உடலில் சரியான அளவில் நீர்ச்சத்து இருந்தால் தான், சிறுநீரகங்களால் முறையாக டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்ற முடியும். ஆகவே நீங்கள் இதுவரை நீரை சரியாக குடிக்காமல் இருந்தால், இனிமேல் நீரைக் குடிக்க ஆரம்பியுங்கள். மேலும் உடல் வறட்சி சிறுநீரகங்களைப் பாதிப்பதோடு, சிறுநீரக கற்களையும் உண்டாக்கும்.

சிறுநீரை அடக்குவது

அடிக்கடி சிறுநீரை அடக்கினால், அது சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல. சிறுநீரகங்கள் தான் நீர்மக் கழிவுகளை சிறுநீர்ப்பைக்கு அனுப்புகிறது. இப்படி சிறுநீர்ப்பை நிரம்பி இருக்கும் போது வரும் உணர்வு தான் சிறுநீர். இந்த சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பைக்கு அனுப்பப்பட்ட டாக்ஸின்கள் அப்படியே தங்கி, நாளடைவில் அது சிறுநீரக கற்களை உண்டாக்குவதோடு, சில வகை சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தும். எனவே அடிக்கடி சிறுநீர் கழிக்க மறக்க வேண்டாம்.

குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள்

பரிந்துரைக்கப்பட்ட மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியது முக்கியம். மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை சரியாக எடுக்காவிட்டாலோ அல்லது குறிப்பிடப்பட்டுள்ள அளவிற்கு அதிகமாக எடுத்தாலோ, குறிப்பிட்ட மருந்துகள் சிறுநீரக பாதிப்பை உண்டாக்கும். அதேப் போல் எவ்வளவு காலம் எடுக்க வேண்டுமோ, அவ்வளவு காலம் மட்டுமே எடுக்க வேண்டும். ஆஸ்பிரின், ஐபுப்ரோஃபென் மற்றும் அசிடமினோஃபென் போன்றவற்றை தொடர்ச்சியாக எடுத்து வந்தால், சிறுநீரக பாதிப்பு ஏற்படும். எனவே மருத்துவர் பரிந்துரைக்காமல் எவ்வித மருந்து மாத்திரைகளையும் எடுக்காதீர்கள்.

அதிகளவிலான இனிப்பு உட்கொள்வது

அளவுக்கு அதிகமாக இனிப்பு உணவுகளை எடுத்தால், அது சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆய்வு ஒன்றில் அதிகளவு ஃபுரூக்டோஸை உட்கொள்ளும் போது, அது உடலில் யூரிக் அமில அளவை அதிகரித்து, கார்டியோரினல் நோய்க்கு வழிவகுப்பதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரக பிரச்சனைகளுக்கான அபாயம் அதிகம் இருக்கும். அதிலும் சர்க்கரை உணவை அதிகம் உட்கொண்டால், அது நிலைமையை மோசமாக்கும். ஆகவே சர்க்கரை குறைவான மற்றும் நார்ச்சத்து அதிகமான உணவை உட்கொள்ளுங்கள்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்காமல் இருப்பது

ஒருவர் தங்களது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. உயர் இரத்த அழுத்த பிரச்சனையானது சிறுநீரக பாதிப்பை உண்டாக்கும். எனவே உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுங்கள். இல்லாவிட்டால், சிறுநீரக பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும்.

அளவுக்கு அதிகமான புரோட்டீன் எடுப்பது

அளவுக்கு அதிகமான புரோட்டீன், குறிப்பாக மாட்டிறைச்சியை அதிகம் சாப்பிட்டால், அது சிறுநீரக பாதிப்பின் அபாயத்தை அதிகரிக்கும். சிறுநீரகங்கள் தான் புரோட்டீன் உணவுகளில் இருந்து அதிகம் வெளிவரும் டாக்ஸின்களான நைட்ரஜன், அமோனியா போன்றவற்றை வடிகட்டி வெளியேற்றுகிறது. எப்போது ஒருவர் அதிகளவு புரோட்டீனை உட்கொள்கிறாரோ, அவர்களது உடலில் டாக்ஸின்களின் அளவு அதிகரித்து, சிறுநீரகங்களில் அதிக அழுத்தம் மற்றும் வேலைப்பளு கொடுக்கப்பட்டு, அதன் விளைவாக சிறுநீரக பாதிப்பு ஏற்படும். எனவே புரோட்டீன் உணவுகளை அளவாக சாப்பிடுங்கள்.

உடற்பயிற்சியைத் தவிர்ப்பது

உடற்பயிற்சி உடலில் சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும். மேலும் உடற்பயிற்சியை ஒருவர் அன்றாடம் தவறாமல் மேற்கொண்டு வந்தால், அதனால் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தினந்தோறும் உடற்பயிற்சியை செய்தால், உடலைத் தாக்கும் நோய்களின் அபாயம் குறையும்.

சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணாதிருப்பது

சிறுநீரகங்கள் ஏற்கனவே பாதிப்பில் இருக்கும் போது, ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டால் மட்டும் சரியான உணவை சாப்பிடுகிறீர்கள் என்று அர்த்தமல்ல. உங்கள் சிறுநீரகங்கள் ஏற்கனவே கஷ்டப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, உண்ணும் உணவுகளில் லேசான மாற்றத்தைச் செய்தால் போதும். அதுவும் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸை குறைவான அளவில் எடுக்க மருத்துவர் பரிந்துரைப்பர். மேலும் இந்த காலத்தில் சாதம், பிரட், பாஸ்தா போன்றவை சிறந்ததாக இருக்கும்.

உப்பை அதிகம் எடுப்பது

அதிகளவிலான உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால், அது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்த பிரச்சனை வந்தால், சிறுநீரகங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும். ஆகவே உப்பு நிறைந்த ஸ்நாக்ஸ், ஜங்க் உணவுகள், கேன் உணவுகள், பாக்கெட் உணவுகளைத் தவிர்த்திடுங்கள். மாறாக பழங்கள், காய்கறிகள், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு ஒருவர் 2,300 மிகி சோடியம் எடுப்பதே நல்லது.

தொற்றுக்களை சரிசெய்யாமல் இருப்பது

அடுத்த முறை உங்களுக்கு ஏதேனும் வைரல் தொற்றுகள் இருந்தால், அதனை உடனே சரிசெய்யும் ஆன்டி-பயாடிக்குகளை எடுங்கள். ஏனெனில் ஆய்வு ஒன்றில் தொற்றுக்களை உடனே சரிசெய்யாமல் இருந்தால், அது சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாம். அதுவும் இந்த தொற்று அப்படி சிறுநீரகங்களுக்குப் பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கும் என ஆய்வில் தெரிய வந்தது. அதேப் போல் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றின் போது போதிய ஓய்வு எடுக்காமல் இருந்தாலும், அது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்குமாம்.

வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களின் குறைபாடு ஏற்படுவது

ஆய்வுகளில் வைட்டமின் பி6 மற்றும் டி குறைபாடு இருந்தால், அது சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. மக்னீசியம் உடலுக்கு மிகவும் இன்றியமையாத சத்தாகும். இது இல்லாமல், உடலால் அதிகளவிலான கால்சியத்தை வெளியேற்ற முடியாமல் போய், சிறுநீரக கற்களை உருவாக்கும்.

அதிகளவு காப்ஃபைன் அருந்துவது

ஆய்வு ஒன்றில் ஒருவர் நீண்ட நாட்கள் அதிகளவு காப்ஃபைன் நிறைந்த பானத்தை குடித்து வந்தால், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். மற்றொரு ஆய்வில், அதிகளவிலான காப்ஃபைன் சிறுநீரில் கால்சியத்தை அதிகம் வெளியிடச் செய்து சிறுநீரக கற்களை உருவாக்கும் என தெரிய வந்துள்ளது.

சரியாக தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருப்பது

மனிதனுக்கு தூக்கம் மிகவும் அவசியம். இந்த நேரத்தில் தான் உடல் தன்னைத் தானே சரிசெய்து புதுப்பிக்கும். ஆனால் போதிய தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இரத்த அழுத்தம் எந்த வகையில் அதிகரித்தாலும், அதனால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். ஆகவே தினமும் 7-8 மணிநேர தூக்கத்தைத் தவறாமல் மேற்கொள்ளுங்கள்.

புகைப்பிடிப்பது

புகைப்பிடித்தால் உடனடியாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதோடு இதய நோயின் அபாயமும் அதிகரிக்கும். அத்துடன் சிறுநீரகங்களில் உள்ள இரத்த நாளங்கள் குறுகும், தமனிகள் பாதிப்படையும் மற்றும் சிறுநீரகங்களில் உள்ள இரத்த நாளங்கள் தடிமனாகும். அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் புகைப்பிடித்தால், சிறுநீரக பிரச்சனையின் அபாயம் அதிகரிக்கும். ஆகவே இப்பழக்கத்தை முதலில் கைவிடுங்கள்.

இப்போது சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில அற்புதமான பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அடிக்கடி குடித்து வந்தால், சிறுநீரகங்கள் எப்போதும் சுத்தமாக இருக்கும்.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் உள்ள பீட்டைன் என்னும் பொருள், சிறுநீரின் அமிலத்தை அதிகரிக்கும். இந்த பீட்ரூட்டை ஒருவர் ஜூஸ் போட்டு குடித்தால், இது சிறுநீரகங்களல் இருந்து கால்சியம் பாஸ்பேட்டை வெளியேற்ற உதவும். இதன் விளைவாக சிறுநீரகங்களின் செயல்பட்டை மேம்பட்டு, சிறுநீரக கற்களின் உருவாக்கம் குறையும்.

கிரான்பெர்ரி ஜூஸ்

கிரான்பெர்ரி ஜூஸ் சிறுநீரக பாதை தொற்றுகளுக்கு நல்லது. இந்த ஜூஸ் சிறுநீரகங்களில் உள்ள அதிகளவிலான கால்சியம் ஆக்ஸலேட்டுக்களை நீக்க உதவி, சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும். ஆகவே உங்களுக்கு கிரான்பெர்ரி பழம் கிடைத்தால், அதை ஜூஸ் போட்டுக் குடியுங்கள்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சையில் உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள சிட்ரேட் அளவை அதிகரிக்கும். இதனால் சிறுநீரக கற்களின் உருவாக்கம் குறையும். ஆகவே சிறுநீரகங்கள் சுத்தமாக இருக்க வேண்டுமென நினைத்தால், தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர் பானம்

ஆப்பிள் சீடர் வினிகர் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. முக்கியமாக இது உடலை, அதுவும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும். இதில் உள்ள சிட்ரிக் அமிலம், அசிடிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ் அமிலம் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கும். எனவே ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து அடிக்கடி குடியுங்கள்.

பெர்ரி ஸ்மூத்தி

பெர்ரிப் பழங்களான ப்ளுபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் உள்ளன. இவை உடலில் இருந்து ப்ரீ-ராடிக்கல்களை வெளியேற்றி, சிறுநீரகங்கள் மட்டுமின்றி, உடலின் இதர உறுப்புக்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்கும். அதற்கு பெர்ரிப் பழங்களைக் கொண்டு அடிக்கடி ஸ்மூத்தி தயாரித்துக் குடியுங்கள்.

கேரட் ஜூஸ்

கேரட்டில் உள்ள அதிகளவிலான கரோட்டீன், புற்றுநோயை எதிர்க்க உதவுவதோடு, டாக்ஸின்கள் மற்றும் கனமான மெட்டல்களை சிறுநீரகங்களில் இருந்தும் வெளியேற்றும். இதில் உள்ள நார்ச்சத்து, டாக்ஸின்களுடன் இணைந்து, உடலில் இருந்து வெளியேறும். ஆகவே அடிக்கடி கேரட் ஜூஸைக் குடியுங்கள்.

இளநீர்

இளநீர் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, சிறுநீரகங்களுக்கும் நல்லது. இதில் சர்க்கரை குறைவு, அமிலம் குறைவு, கலோரிகள் இல்லை மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் அதிகம். இதனால் இவை சிறுநீரகங்களில் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளும். மேலும் இளநீர் உடலை வறட்சியின்றி, நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளும்.

Rates : 0

Loading…