புளியானம் செய்வது எப்படி

புளியானம் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

கெட்டி புளிக்கரைசல் – அரை கப்,
சீரகம் – ஒரு ஸ்பூன்,
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 6,
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,
தோலுரித்த சின்ன வெங்காயம் – ஒரு கப்,
கெட்டி தேங்காய்ப்பால், 2-ம் தேங்காய்ப்பால் – தலா ஒரு கப்,
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

தேங்காய் எண்ணெயை சூடாக்கி… சீரகம், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன், 2-ம் தேங்காய்ப்பால் சேர்க்கவும். பிறகு, முதல் தேங்காய்ப்பால், அரிசிமாவு சேர்த்து… சற்றே இறுகி, கூட்டு போல வரும் வரை கைவிடாமல் கிளறவும். உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

இது ஒரு ஸ்ரீலங்கா டிஷ் ஆகும். சப்பாத்தி, தோசையுடன் சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம்

Rates : 0

Loading…