மொஹல் சிக்கன் கிரேவி செய்வது எப்படி

மொஹல் சிக்கன் கிரேவி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

கொத்துகறி சிக்கன் – அரைக் கிலோ
நறுக்கிய பச்சை மிளகாய் – 6
நறுக்கிய தக்காளி – 4
நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – 1 ஸ்பூன்
பூண்டு – 10 பல்
இஞ்சி -சிறிதளவு
நெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லி இலை – சிறிதளவு


செய்முறை

இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் நெய் விட்டு நறுக்கிய இஞ்சி பூண்டினைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

அத்துடன் கொத்துகறி சிக்கனை சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டிஅடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேகவிடவும்.

கறி முக்கால் பகம் வெந்தவுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, நெய் தனியாக பிரிந்து வரம் வரை வதக்கவும்.

அதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, கறி நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

சுவையான மொஹல் சிக்கன் கிரேவி ரெடி. கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

Rates : 0

Loading…