ராகி ஆலு பரோட்டா செய்வது எப்படி

ராகி ஆலு பரோட்டா செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – அரை கப்
ராகி மாவு – அரை கப்
உப்பு – தேவையான அளவு


ஸ்டஃப்பிங்க்கு…

உருளைக்கிழங்கு – 1
கரம்மசாலாத்தூள் – அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 ஸ்பூன்
ஒமம் – கால் ஸ்பூன்


செய்முறை

கோதுமை மாவு ராகி மாவு இரண்டையும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, ஒமம் சேர்த்து கிளறவும்.

மாவை சமஅளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டவும்.

சூடான தோசைக் கல்லில் பரோட்டாவை சிறிதளவு எண்ணெய் விட்டு 2 பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சுவையான ராகி ஆலு பரோட்டா ரெடி

Rates : 0

Loading…