வெஜிடபிள் சேமியா கிச்சடி செய்வது எப்படி

Loading...

வெஜிடபிள் சேமியா கிச்சடி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

வறுத்த சேமியா – அரை கிலோ
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய ப.மிளகாய் – 2
உருளைக்கிழங்கு – 1 நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது
பீன்ஸ் – 4 நறுக்கியது
தக்காளி – 2 நறுக்கியது
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, க.பருப்பு – தலா ஒரு ஸ்பூன்


செய்முறை

கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, தாளித்து கறிவேப்பிலை போட்டு வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் சிறிது உப்பு காய்கறிகளையும் சேர்த்து வதக்கி அதனுடன் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் சேமியா சேர்த்து கிளரி நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்

சுவையான வெஜிடபிள் சேமியா கிச்சடி ரெடி

Rates : 0

Loading…