அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலும் இப்படி ஒரு சுவாரஸ்யமா விரைவாக பகிருங்கள்

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலும் இப்படி ஒரு சுவாரஸ்யமா விரைவாக பகிருங்கள்

21 ஆம் நூற்றாண்டு துவங்கிய பின்னர் நம்முடைய வசதிக்கேற்ப ஏராளமான விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும்.

இன்னும் சில விஷயங்களை நாம் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டேயிருப்போம் ஆனால் அவை எதற்காக என்ற அடிப்படை நமக்கு தெரிந்திருக்காது.

அதனுடைய உண்மையான பயன்பாடு நமக்கு தெரியாமலோ அல்லது சரியாக புரிந்து கொள்ளாமலோ இருந்திருப்போம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பத்து பொருட்கள் அவை குறித்த உண்மையான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.

பேனா மூடி

பேனா மூடியில் நுனியில் ஓட்டை இருக்கும் அந்த ஹோல் மூலமாக பிரசர் உள்ளிழுக்கப்பட்டு பேனாவை எளிதாக திறக்கவும் மூடவும் பயன்படும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அது தான் தவறு.

உண்மையில் பேனா மூடியில் எதற்கு தெரியுமா ஓட்டை இருக்கிறது… தவறுதலாக யாரேனும் அதனை முழுங்கி விட்டால் காற்று சென்று வர வழி வேண்டுமல்லவா அதற்காகத்தான். அவசர உதவி கொடுப்பதற்கான அவகாசத்தை அது பெற்றுத் தரும்.

லிட்டில் பாக்கெட்

இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்களுக்கு ஜீன்ஸ் பயன்பாடு அதிகரித்து வருகிறது.ஜீன்ஸிலேயே பல்வேறு வெரைட்டிகள் இன்று நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஜீன்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பாக்கெட் எதற்கு என்ற சந்தேகம் எழாமல் இருந்திருக்காது.

சாதாரண பக்கெட் அருகிலேயே அல்லது அதற்கு உள்ளேயே லிட்டில் பாக்கெட் என்ற சிறிய பாக்கெட் ஒன்று இருக்கும். இது எதற்காகத் தெரியுமா?

இது தொன்றுதொட்டு முந்தைய ஆங்கிலேயர்களுக்கு வசதியாக தயாரிக்கப்பட்டது.வெஸ்ட்டர்ன் கவ் பாய்ஸ் மற்றும் தங்கச் சுரங்களில் பணியாற்றுபவர்கள் தான் ஆரம்பத்தில், ஜீன்ஸ் அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அப்போது தங்களுக்கு கிடைக்கக்கூடிய சில ரகசியப் பொருட்களை பத்திரமாக வைக்க இந்த பாக்கெட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ப்ளாக் ஹோல்

இன்றைக்கு பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகிறார்கள். இந்த செல்ஃபி யுகத்தில் எல்லாருமே விதவிதமான கேமரா போன் வாங்கி பயன்படுத்துகிறோம். என்றாவது இந்த கருப்பு ஹோல் கவனித்திருக்கிறோமா?

கேமராவுக்கும் ஃப்ளாஷ் லைட்டுக்கும் நடுவில் அல்லது அருகில் இந்த ப்ளாக் ஹோல் இருக்கும். எல்லா விதமான கேமரா போன்களிலும் இந்த ஹோல் இருக்கும்.

மைக்ரோ போன்

அந்த ப்ளாக் ஹோல் தான் மைக்ரோ போன். மிகவும் துல்லியமான சவுண்ட் அது ரெக்கார்ட் செய்திடும். இதனுடைய ஸ்பெஷல் என்ன தெரியுமா?

இந்த ப்ளாக் ஹோல் எக்ஸ்ட்ரா நாய்ஸ் எது இருந்தாலும் இதுவே ஃபில்டரும் செய்வதால் நமக்கு தேவையான சத்தங்கள் மட்டும் மிகத் துல்லியமாக பதிவு செய்யலாம்.

விமானப்பயணம்

விமானப் பயணம் மேற்கொள்கிறவர்கள் எல்லாம் இதனை கவனித்திருக்கலாம். விமானத்தின் ஜன்னலில் சிறிய ஹோல் ஒன்று இருக்கும். இது இரண்டு காரணங்களுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

முதல் காரணம் காற்றோட்டத்தை சமன் செய்திடும். விமானம் மேலே பறக்கும் போது அதற்கு வெளியேயும் உள்ளேயேயும் வெவ்வேறு விதமான பிரஷர் இருக்கும். அதனை சமன் செய்ய இந்த ஹோல் பயன்படுகிறது.

இரண்டாவது காரணம் பனிமூட்டத்தினால் கண்ணாடி முழுவதுமாக பனி படராமல் இருக்க உதவிடும்.

ஹேர் பின்

ஹேர் பின்களில் ஒரு பகுதி ஸ்ட்ரைட்டாகவும் இன்னொரு பகுதி ஜிக்ஜாக்காக வளைந்து நெளிந்திருக்கும். இது எதற்காகத் தெரியுமா? இன்னும் சில வகை ஹேர் பின் இரண்டுமே ஒரே மாதிரி இருக்கும்.

அது கொஞ்சம் திக்காக இருக்கும். இப்படி வளைந்து நெளிந்திருப்பவை முடியை டைட்டாக பிடித்துக் கொள்ள உதவுகிறது, அதனால் தான் இதனை பூ வைக்க பயன்படுத்துகிறார்கள்.

பூட்டு

பூட்டில் சாவி போட்டு திறக்க ஒரு ஹோல் அதற்கு அருகிலேயே இன்னொரு ஹோல் இருக்கும்.இதுவரை அதனை கவனிக்கவில்லை எனில் இனிமேல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.

வெளியில் பூட்டு போடும் போது மழை நீர் உள்ளே சென்று துருப்பிடித்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த குட்டி ஓட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது.

கீ போர்டு

கீ போர்டுகளில் F மற்றும் J ஆகிய பட்டன்களில் மட்டும் சிறிய மேடு போன்ற பகுதி இருக்கும். இதனை என்றைக்காவது கவனித்திருக்கிறீர்களா?

இல்லையென்றால் இப்போதே பாருங்கள். அந்த இரண்டு எழுத்தில் மட்டும் சிறிய மேடு போன்று இருக்கும்.டைப் ரைட்டிங் ப்ரோஃபஷ்னலாக கற்றுக் கொண்டவர்கள்.

அதாவது பத்து விரல்களை பயன்படுத்தி டைப் செய்கிறவர்களுக்கு அவை தான் ஹோம் கீ. இந்த மேடைக் கொண்டு குனிந்து கீ போர்டை பார்க்காமலே ஹோம் கீஸ் எது என்று கண்டுபிடிக்கலாம்.

Rates : 0

Loading…