ஆளி விதை சட்னி செய்வது எப்படி

ஆளி விதை சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

ஆளி விதை – 30 gms
கறிவேப்பிலை- 10 gms
உளுத்தம் பருப்பு- 15gms
துவரம் பருப்பு – 15gms
காய்ந்த மிளகாய் – 3 அல்லது தேவைக்கேற்றவாறு
உப்பு தேவைக்கேற்றவாறு
பெருங்காயம் சிறிது


தாளிக்க:

எண்ணை – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – கொஞ்சம்


செய்முறை:

1.வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் பெருங்காயம் ,கறிவேப்பிலை,ஆளி விதை, உளுத்தம் பருப்பு, மிளகாய், துவரம் பருப்பு, ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.
2.ஆறியபின் உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
3.கடுகு,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

Rates : 0

Loading…