இது தெரிந்தால் இனி பப்பாளி விதைகளை தூக்கிபோட மாட்டீங்க

இது தெரிந்தால் இனி பப்பாளி விதைகளை தூக்கிபோட மாட்டீங்க

கனிகளில் அதிக சுவையும் மருத்துவகுணங்களும் அதிகம் காணப்படுவது பப்பாளி பழத்தில் தான். இதில் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைந்துள்ளது.

பப்பாளியை தினமும் சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பிரச்சனைகளே அண்டாது.

ஆனால் பப்பாளியை சாப்பிட்டுவிட்டு பப்பாளி விதைகளை நம்மில் பலரும் தூக்கி எறிந்துவிடுகிறோம்.

பப்பாளியைப் போலவே பப்பாளி விதைகளும் நமக்கு அரிய சத்துக்களையும் அற்புத பலன்களையும் தருகிறது.

பப்பாளி விதை பொடி- பப்பாளி விதைகளை வெளியில் காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும், தினமும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிடலாம்.

கல்லீரல் சிரோசிஸ்

30 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை ஜூஸில் அரை ஸ்பூன் பப்பாளி விதைபொடியை கலந்து குடித்தால் அல்லது உணவில் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் சிரோசிஸ் வியாதி விரைவில் குணமடையும்.

சிறு நீரக பாதிப்பு

சிறு நீரக பாதிப்பு உள்ளவர்கள் பப்பாளி விதைகளை சாப்பிட்டு வந்தால் சிறு நீரக செயலிழப்பு வராமல் தடுக்கலாம்.

ஆர்த்ரைடிஸ்

ஆர்த்ரைடிஸ், மூட்டுகளில் வீக்கம், அழற்சி, உள்ளுறுப்புகளில் தடிப்பு ஆகியவை இருந்தால் பப்பாளி விதை எடுத்துக் கொண்டால் நல்லது.

டெங்கு மற்றும் டைபாய்டு

டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுபாவர்கள் பப்பாளி விதைப் பொடியை பாலில் கலந்து குடித்தால் குணமாகும்.

வயிற்றுப் புழு

தினமும் பப்பாளி விதைப் பொடியை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் அமீபா போன்ற எப்படி பட்ட குடல் புழுவும் அழிந்துவிடும் வயிறு சுத்தமாகிவிடும்.

கர்ப்பத்தடை

இயற்கையான கர்ப்பத்தடை மருந்தாகும். ஆனால் கர்ப்பிணிகள் மட்டும் சாப்பிடக் கூடாது.

Rates : 0

Loading…