ஈஸி ஆனியன் சட்னி செய்வது எப்படி

ஈஸி ஆனியன் சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 2
காய்ந்த மிளகாய் – 3
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்


செய்முறை:

வெங்காயத்தைத் தோல் நீக்கிக் கழுவி நீளமாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

அடுப்பை அணைத்து சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து லேசாக தண்ணீர் விட்டு திக்காக மைய அரைத்து, பவுலில் சேர்க்கவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, சட்னியில் சேர்க்கவும். இதை தோசை, இட்லியோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Rates : 0

Loading…