கம்பு கொத்தமல்லித் துவையல் தயாரிப்பது எப்படி

கம்பு கொத்தமல்லித் துவையல் தயாரிப்பது எப்படி


தேவையான பொருட்கள்

கம்பு – கால் கப்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 2
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தோல் சீவிய இஞ்சி – ஒரு இன்ச் துண்டு (நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் – கால் கப்
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

வெறும் வாணலியில் கம்பு சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர், உளுத்தம்பருப்பு, கொத்தமல்லித்தழை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், புளி, இஞ்சி ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறிய பிறகு அத்துடன் தேங்காய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாகத் துவையல் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். மணமான, பசுமையான கொத்தமல்லித் துவையலைச் சூடான சாதத்தில் நெய்விட்டு சேர்த்துச் சாப்பிடலாம். இட்லி, தோசை, இடியாப்பத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

Rates : 0

Loading…