கம்பு ஸ்பைஸி போளி தயாரிப்பது எப்படி

கம்பு ஸ்பைஸி போளி தயாரிப்பது எப்படி


தேவையான பொருட்கள்

கம்பு மாவு – ஒரு கப்
கோதுமை மாவு – அரை கப்
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் – கால் கப்
கடலைப்பருப்பு – முக்கால் கப்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

கடலைப்பருப்பை 20 நிமிடங்கள் ஊறவைத்து 15 நிமிடங்கள் வேகவைத்துத் தண்ணீரை வடிகட்டவும். அகலமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீர்விட்டு சர்க்கரை, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து சர்க்கரை கரைந்ததும் அதனுடன் கம்பு மாவு, கோதுமை மாவு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசையவும் (சுடுநீர் சேர்த்தும் பிசைந்துகொள்ளலாம்).

மாவை பாலித்தீன் கவரில் சுற்றி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். வேகவைத்த கடலைப்பருப்பு ஆறிய பிறகு மிக்ஸியில் மாவாக அரைத்து எடுக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர், கரம் மசாலாத்தூள், சீரகம், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

கம்பு மாவை பாலித்தீன் கவரிலிருந்து எடுத்துச் சிறிய உருண்டைகளாக்கி சப்பாத்திகளாகத் திரட்டி, நடுவே மசாலா உருண்டையை வைத்து மூடி கைகளால் போளியாகத் தட்டவும். தோசைக்கல்லில் வெண்ணெய்விட்டு, தட்டிய போளிகளைப் போட்டு இருபுறமும் வேகவைத்துப் பொன்னிறமாக எடுக்கவும்.

Rates : 0

Loading…