கேரட் தக்காளி சட்னி செய்வது எப்படி

Loading...

கேரட் தக்காளி சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

கேரட் பெரியது – 1
தக்காளி – 1 (சிறியது)
சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு


தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்


செய்முறை:

புளியைத் தண்ணீரில் ஊற வைக்கவும். கேரட்டின் தோலை நீக்கி, மெல்லியதாக சீவி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தீயை மிதமாக்கி வெங்காயம், இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் வதக்கவும். வெங்காயத்தின் நிறம் மாறியதும் தக்காளி, உப்பு, சேர்த்து மைய வதக்கவும். சீவிய கேரட், புளிக்கரைசலை இதில் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி ஆற விடவும். இதை மிக்ஸியில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்துத் தாளிக்க கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து வதக்கி, சட்னியில் சேர்த்துப் பரிமாறவும். டிபன் மற்றும் சாதத்தோடு தொட்டு சாப்பிடலாம்.

Rates : 0

Loading…