கொள்ளுப்பொடி தயாரிப்பது எப்படி

கொள்ளுப்பொடி தயாரிப்பது எப்படி


தேவையான பொருட்கள்

கொள்ளு – கால் கிலோ, பூண்டுச் சாறு – 100 மி.லி.,
காய்ந்த மிளகாய் – 5,
மிளகு – 10 கிராம்,
காய்ந்த கறிவேப்பிலை – 50 கிராம்,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

கொள்ளைச் சுத்தம்செய்து, பூண்டுச் சாறுடன் கலந்து மூன்று நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சாறு முழுவதும் சுண்டிய பிறகு, கொள்ளு, காய்ந்த மிளகாய், மிளகு இவற்றை லேசாக வறுத்து, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துத் தூளாக்கிக்கொள்ளவும்.

சாதத்தில் சிறிதளவு பொடி சேர்த்து நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் ஏற்ற உணவுப் பொடி.

மருத்துவப் பயன்: உடல் பருமன், வாயுத் தொல்லை, மாதவிடாய் பிரச்னைகளைத் தீர்க்கும்.

Rates : 0

Loading…