சமையலறை சங்கதிகள் மோர் புளிக்காமா இருக்கனுமா ஊறுகாய் கெடாமல் இருக்க

சமையலறை சங்கதிகள் மோர் புளிக்காமா இருக்கனுமா ஊறுகாய் கெடாமல் இருக்க

மோர், தயிரில் ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு போட்டு வைத்தால் விரைவில் புளிக்காமலும், வாடை வராமலும் இருக்கும்.

# மோர், தயிரில் ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு போட்டு வைத்தால் விரைவில் புளிக்காமலும், வாடை வராமலும் இருக்கும்.

# வாழைத்தண்டை பொடிப்பொடியாக நறுக்கி பக்கோடாவிற்கு கலந்து வைத்த மாவில் போட்டுப் பிசைந்து பக்கோடா செய்தால் சுவையாக இருக்கும்.
தோசை மாவில் தேங்காய்ப்பாலை சேர்த்து தோசை செய்தால் மணம் ஊரை கூட்டும்.

# மைதா மாவை ஒரு மெல்லிய துணியில் சிறு மூட்டையாக கட்டி ஆவியில் வேகவைத்து ஆறியதும் உதிர்த்து உப்பு, ஓமம் அல்லது சீரகம் சேர்த்து பிசைந்து சீடை செய்தால் வாயில் போட்டதும் கரையும்.

# ஊறுகாய் பாட்டிலில் இருந்து எடுக்கும்போது முள் கரண்டியால் ஊறுகாயை எடுத்தால் அதிலுள்ள எண்ணெய் வடிந்து விடும். ஊறுகாய் மட்டும் வரும். இதனால் ஊறுகாய் எண்ணெயில் ஊறி கெட்டுப் போகாமல் இருக்கும். சாப்பிடுபவர்களுக்கும் எண்ணெய் சேராது.

# வீட்டில் பழக்கூழ் தயாரிக்கும் போது ஒரு தேக்கரண்டி கிளிசரினைச் சேர்க்கலாம். இவ்வாறு செய்தால் 100 கிராம் வரை சர்க்கரை சேர்ப்பதை குறைக்கலாம்.

# ஆப்பிள்கள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப்பொடி, வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி கலந்து தாளித்து கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.

# அடைமாவு அதிகம் புளித்துவிட்டால், மாவை இட்லி தட்டில் ஊற்றி 7 நிமிஷம் வேக வைத்து உதிர்த்து, கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் தாளித்து, உப்பு சேர்த்தால் அடை காரப்புட்டு தயார்.

# வாழைத்தண்டை பொடிப்பொடியாக நறுக்கி பக்கோடா மாவில் போட்டு பிசைந்து, பொரித்தால் பக்கோடா ருசியாக இருக்கும்.

# பாத்திரத்தின் உள் பகுதியில் கொஞ்ச நேரம் அடுப்பில் காட்டிய பிறகு கத்தி வைத்து எடுத்தால் ஈஸியாக எடுக்க வரும்.

# கடலைமாவு கொஞ்சம் தண்ணீர் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து தேய்த்து கழுவினால் பிசுக்கு மாயமாக மறையும்.

# காப்பி போட்டு மீந்துவுள்ள டீகாஷன் கொன்டு தேய்த்து கழுவினால் தரை வழுக்காது.

# கைகளில் வாடை கையினை விட்டு போகாது. சுடுநீரில் எலுமிச்சையினை கலந்து கைகளை ஊற வைத்து கழுவவும்.

# அசைவ உணவுகள் சாப்பிட்ட பின்பு இதனை போல் கழுவினால் வாடை இருக்காது.

Rates : 0

Loading…