சிக்கன் டிக்கா தயாரிப்பது எப்படி

சிக்கன் டிக்கா தயாரிப்பது எப்படி


தேவையான பொருட்கள்

வெட்டிய சிக்கன் துண்டுகள் – அரை கிலோ,
பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3,
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
மஞ்சள் – அரை டீஸ்பூன்,
மிளகுத்தூள் – தேவையான அளவு,
கொத்தமல்லித்தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி – பூண்டு விழுது 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா – ஒரு கைப்பிடி அளவு,
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2,
தயிர் – அரை கப், எண்ணெய் – 2 டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

பாத்திரத்தில் மஞ்சள்தூள், மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லித்தூள் எடுத்துக் கொள்ளவும். அதில் உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து சிக்கனையும் அதனுடன் சேர்த்து புரட்டி வைக்கவும். அரை மணி நேரமாவது சிக்கன் ஊற வேண்டும். கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும்… பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

பிறகு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். மசாலாவில் நன்றாக ஊறி இருக்கும் சிக்கனை எடுத்து தந்தூரி அடுப்பில் அல்லது நெருப்புத் தணலில் காட்டியபடி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். ‘மைக்ரோவேவ் அவன்’-னில் வைத்தும் வேக வைக்கலாம்.

சிக்கன் வெந்ததும் கடாயில் உள்ள மசாலா கலவையுடன் சேர்த்து, உப்பு போட்டு நன்றாக கிளறவும். மசாலாவும் சிக்கனும் ஒன்றாக சேர்ந்தபின் அதன் மீது கொத்தமல்லி, புதினா தூவி அடுப்பை அணைக்கவும். சில நிமிடங்களில் சிக்கன் சூட்டில் கொத்தமல்லி, புதினா வெந்து, அதன் சாறும் சிக்கனில் இறங்கிவிடும். பிறகென்ன… சுடச்சுட பரிமாற வேண்டியதுதான்

Rates : 0

Loading…