சுட்ட கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி

சுட்ட கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

நீளமான கத்திரிக்காய் – 1 (மீடியம் சைஸ்)
எண்ணெய் , கடுகு – தலா 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
புளி – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

கத்திரிக்காயைக் கழுவி, ஈரம் போக நன்கு துடைக்கவும். கத்திரிக்காயின் மேல் எண்ணெய் தடவி கத்தியில் குத்தி அடுப்பில் காட்டி, எல்லா புறமும் சுட்டெடுக்கவும். ஆறியதும் தோலை நீக்கி ஒரு பவுலில் போட்டு கத்திரிக்காயை மசிக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கி ஆற விடவும். இனி, மசித்த கத்திரிக்காய், உப்பு, புளி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து சட்னியில் சேர்த்துக் கிளறவும். இட்லி, தோசை சாதத்தோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Rates : 0

Loading…