செட்டிநாட்டுக் கார சட்னி செய்வது எப்படி

செட்டிநாட்டுக் கார சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
மீடியம் சைஸ் தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் – 3 அல்லது 4
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது


செய்முறை:

மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் மைய அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் அரைத்தவற்றைச் சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடம் குறைந்த தீயில் வேக விட்டு எடுத்தால், பச்சை வாசனை போய் சட்னி சுவைக்க சூப்பராக இருக்கும். அல்லது அரைத்த சட்னியில் தாளித்தவற்றைக் கொட்டிக் கிளறி, சாப்பிட்டால் லேசாக பச்சை வாசனையுடன் காரமாக, சட்னி சுவைக்க அருமையாக இருக்கும்.

Rates : 0

Loading…