தக்காளி-பூண்டு ஸ்பைஸி சட்னி செய்வது எப்படி

தக்காளி-பூண்டு ஸ்பைஸி சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் – 5 (காரத்துக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்)
பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – ஒரு டேபிஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


தாளிக்க:

எண்ணெய் – அரை டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்


தேவையான பொருட்கள்
செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி பூண்டு, மிளகாயைப் போட்டு மூன்று நிமிடம் நன்கு வதக்கி ஒரு தட்டில் ஆற வைக்கவும். இதே கடாயில் தக்காளி சேர்த்து மைய வதக்கவும். அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். வதக்கிய பொருட்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுழற்று சுழற்றி, பின்பு தக்காளியைச் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், கடுகு தாளித்து, சட்னியில் கொட்டிக் கிளறிப் பரிமாறவும்.

Rates : 0

Loading…