தூதுவளைத் துவையல் தயாரிப்பது எப்படி

தூதுவளைத் துவையல் தயாரிப்பது எப்படி


தேவையான பொருட்கள்

முள் நீக்கிய தூதுவளை இலை – 50 கிராம்,
பச்சை மிளகாய் – 4,
சீரகம் – 5 கிராம்,
உப்பு, புளி, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தூதுவளை இலையை நன்றாக வதக்கவும். அதனுடன் மற்றப் பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.

மருத்துவப் பயன்: சளிப்பிரச்னைக்கு அருமையான மருந்து இது. நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு, தொண்டைச் சதை வளர்ச்சி போன்ற பிரச்னைகளையும் தீர்க்கும்.

Rates : 0

Loading…