தேங்காய்ப்பால் பிரியாணி தயாரிப்பது எப்படி

தேங்காய்ப்பால் பிரியாணி தயாரிப்பது எப்படி


தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – ஒரு கப், தேங்காய்ப்பால் – 2 கப், நீளவாக்கில் நறுக்கிய கேரட் – அரை கப், பெரிய வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கவும்), அன்னாசிப்பூ – ஒன்று, பச்சைப் பட்டாணி – கால் கப், பிரியாணி இலை – ஒன்று, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

அரிசியைக் கழுவி 10, 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு நீரை வடிக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் நெய் விட்டு, அரிசியை சேர்த்து ஈரம் போகும் வரை சில நிமிடம் வதக்கவும். மீதமுள்ள நெய்யை குக்கரில் விட்டு, சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, முந்திரி சேர்த்து வறுத்து…

நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து… பிறகு நறுக்கிய கேரட் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து மேலும் வதக்கவும். பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து, கொதிக்க ஆரம்பித்த உடன் உப்பும், அரிசியும் சேர்க்கவும். நன்றாக கலக்கிவிட்டு அடுப்பின் தீயைக் குறைத்து, வெயிட் போட்டு 10 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கி, கிளறி பரிமாறவும்.

Rates : 0

Loading…