நிம்மதியான நித்திரைக்கு நீர் முத்திரை

நிம்மதியான நித்திரைக்கு நீர் முத்திரை

நமது உடலில் 65 சதவீதம் நீரினால் ஆனது. ரத்தம், உமிழ்நீர், செல்களின் உட்பகுதி, செரிமான அமிலங்கள், மூட்டுக்களின் இடையில் உள்ள திரவம், விந்து, தோலின் ஈரப்பசை, கண்களில் உள்ள திரவம் ஏன் எளும்புகளில்கூட 30 சதவீதத்துக்கும் அதிகமாக நீர் மூலக்கூறுகள் உள்ளன.

உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும், அதிகமானாலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். உடலில் உள்ள நீர்சத்தை சமஅளவில் வைத்திருக்க உதவுவதுதான் நீர் முத்திரை. இந்த செய்துவந்தால் நீர் பற்றாக்குறை மற்றும் அதிக குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்சகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும்.

எப்படி செய்வது?

கட்டை விரலின் நுனியும், சுண்டுவிரலின் நுனியும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும். நீர், நெருப்பு என்ற இரண்டு பஞ்சபூதங்களை சமன் செய்வதற்காக செய்யப்படும் முத்திரை இது.

கட்டளைகள்: தரையில் அமர்ந்தோ, நாற்காலியில் கால்கள் தரையில் படும்படி அமர்ந்தோ இந்த முத்திரையைச் செய்யலாம். அமரும்போது முதுகுத்தண்டு, கழுத்து நேராக நிமிர்த்திவைத்து 5 முதல் 20 நிமிடங்கள்வரை செய்யலாம். காலை, மாலை இருவேளைகளும் குளிக்கும் முன்பு செய்வது மிகுந்த பலனை அளிக்கும். மழைக்காலம், குளிர் காலங்களிலும் குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களும் இந்த முத்திரையை ஐந்து நிமிடங்கள் செய்தாலே போதும்.

ஆஸ்துமா நோயாளிகள், அதிகமான சளித் தொந்தரவு இருப்பவர்கள் இந்த முத்திரையைச் செய்யக்கூடாது. முத்திரையை செய்த பிறகு அதிகமாக சளி பிடிக்கத் தொடங்கினால், நீர் முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

பலன்கள்: உடல் வெப்பம், எரிச்சல், சரும வறட்சி, சுவாசிக்கையில் வரும் உஷ்ண மூச்சுக்காற்று சரியாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் வெயில் காலத்தில் குறைந்தது அரைமணி நேரம் இந்த முத்திரையைச் செய்யலாம். அதிகமாக டி.வி.பார்க்கும் குழந்கைகள், வெயிலில் விளையாடும் குழந்கைகள், கம்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இந்த முத்திரையைக் குறைந்தது ஐந்து நிமிடங்கள் செய்வது நல்லது.

கண் வறட்சி, கண் எரிச்சல், கண் சிவந்து போதல், கண்சோர்வு போன்றவை குணமாகும். உடலில் நீர்த்தன்மை குறைவதால் கண்களைச் சுற்றி கருவளையம் வருகிறது. இந்த முத்திரையை இரண்டு வாரங்கள் செய்தவர கருவளையங்கள் மறையும். சரும வறட்சி சரியாகி, சருமம் பளபளக்கும். பருத்தொல்லை நீங்கும். சரும நோய்கள் சரியாகும்.

வயதானவர்களுக்கு ஏற்பட்ட தோல் சுருக்கங்கள் குறைந்து சருமத்தில் ஈரப்பதம் காக்கப்படும். வறட்சியான கூந்தல், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் தலைசூடு, முடி கொட்டுதல் போன்ற பிரச்னைகள் சரியாகும். எவ்வளவு நீர் அருந்தினாலும் தீராத தாகம், சர்க்கரை நோயினால் அதிக தாகம் பிரச்னைகள் சரியாகும். வயோதிகத்தில் மூளையில் நீர்த்தன்மை குறைவதால் ஏற்படும் ஞாபகமறதி பிரச்னை குறையும்.மனம் அமைதியாகி ஆழ்ந்த தூக்கம் வரும்.

Rates : 0

Loading…