நெய் சிக்கன் குழம்பு தயாரிப்பது எப்படி

நெய் சிக்கன் குழம்பு தயாரிப்பது எப்படி


தேவையான பொருட்கள்

சிக்கன் – 700 கிராம்
நெய் – 1 கப்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
பட்டை – 1 இன்ச்
ஏலக்காய் – 2
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய கீரை – 1
டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு


செய்முறை:

முதலில் சிக்கனை கழுவி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை மற்றும் சீரகம் போட்டு தாளிக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் போட்டு, 3-4 நிமிடம் வதக்கி, பின்பு சிக்கன் துண்டுகளை போட்டு, சிக்கன் துண்டுகளானது நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கியப் பின்பு உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து 5 நிமிடம் கிளறி, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

சிக்கன் வெந்து குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி, சிறிது நேரம் கழித்து, அதன் மேல் காய்ந்த வெந்தயக் கீரை போட்டு பிரட்டி, இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான நெய் சிக்கன் குழம்பு ரெடி!!! இதனை சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Rates : 0

Loading…