பனிவரகு கோதுமை போண்டா தயாரிப்பது எப்படி

பனிவரகு கோதுமை போண்டா தயாரிப்பது எப்படி


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – அரை கப்
பனிவரகு மாவு – ஒரு கப்
உளுத்தம்பருப்பு – அரை கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
மிளகு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு


செய்முறை:

உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதனுடன் கோதுமை மாவு, பனிவரகு மாவு சேர்த்து போண்டா மாவு பதத்துக்குத் தண்ணீர்விட்டுக் கலக்கவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, மிளகு, உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, மாவை போண்டாக்களாக உருட்டிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். புதினா சட்னியுடன் பரிமாறவும்.

Rates : 0

Loading…