பருப்பு உருண்டைக் குழம்பு தயாரிப்பது எப்படி

பருப்பு உருண்டைக் குழம்பு தயாரிப்பது எப்படி


தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு – ஒன்றரை கப்,
காய்ந்த மிளகாய் – 5,
கறிவேப்பிலை – சிறிதளவு,
பெருங்காயத்தூள் – அரை சிட்டிகை,
புளி – எலுமிச்சை அளவு,
சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.


தாளிக்க:

கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – கால் கப்.


செய்முறை:

துவரம்பருப்பை ஊறவைக்கவும். ஊறிய பருப்போடு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இந்தக் கலவையை உருண்டைகளாக்கி, இட்லித் தட்டில் வைத்து, இட்லி குக்கரில் 15 நிமிடம் வேகவிடவும். கடாயில் நல்லெண்ணெயை சூடாக்கி… கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, தேவையான உப்பு சேர்க்கவும். கொதித்ததும், உருண்டைகளை சேர்த்து மேலும் கொதிக்கவிட்டு இறக்கவும் (கொஞ்சம் நீர்க்க இருந்தால், ஆற ஆற குழம்பு திக்காகிவிடும்).

மசித்த கீரை, சுட்ட அப்பளம் இதற்கு அட்டகாசமான காம்பினேஷன்.

Rates : 0

Loading…