பாதாம் சட்னி செய்வது எப்படி

பாதாம் சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

பாதாம் – அரை கப் (ஊற வைத்து, தோல் நீக்கவும்)
புளி – எலுமிச்சை அளவு (தண்ணீரில் கரைத்து இறுத்து வைக்கவும்)
கடுகு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 6 (இரண்டாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் – தலா 1
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம் – முக்கால் டீஸ்பூன்
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, இரண்டாக நறுக்கிய வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கவும். வெங்காயத்தின் நிறம் மாறியதும், அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

இந்தக் கலவையை மிக்ஸியில் சேர்த்து கூடவே புளிக்கரைசல், பாதாம், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் சேர்த்துப் பரிமாறவும்.

Rates : 0

Loading…