பிரவுன் ரைஸ் தோசை தயாரிப்பது எப்படி

பிரவுன் ரைஸ் தோசை தயாரிப்பது எப்படி


தேவையான பொருட்கள்

பிரவுன் ரைஸ் – 2 கப்
தோல் நீக்கிய முழு உளுந்து – கால் கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை:

அரிசியை (பிரவுன் ரைஸ்) மூன்று முறை தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் அரிசியைப் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூன்று முதல் நான்கு மணி நேரம் ஊற வையுங்கள். உளுந்தையும் தண்ணீரில் அலசி, வெந்தயம் சேர்த்து தனியாக ஊற விடுங்கள். மிக்ஸியில் உளுந்து, வெந்தயத்தை ஒன்றாக அவை பொங்கும் அளவுக்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து வையுங்கள்.

இதே போல அரிசியையும் தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு மாவுகளையும் ஒன்றாகச் சேர்த்து உப்புப் போட்டு சேர்த்து கலக்கி எட்டு முதல் பத்து மணி நேரம் புளிக்க விடுங்கள். மறுநாள் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, தோசையாகச் சுட்டெடுங்கள்.

Rates : 0

Loading…